இந்திய போஸ்ட் பேமெண்ட் பேங்க் மூலமாக 399 ரூபாய் செலுத்தி 10 லட்சம் ரூபாய் வரை விபத்து காப்பீடு திட்டத்தில் பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ஐபிபிபீ மூலம் ஆண்டுக்கு 399 செலுத்தி 10 லட்சம் ரூபாய் மதிப்பின் விபத்து காப்பீடு பெறலாம் . சாதாரண மக்கள், தபால்காரர், கிராம அஞ்சல் ஊழியர், போஸ்ட் ஆபீஸ் மூலம் குறைந்த பிரீமியத்தில் இந்த காப்பீடு வசதியை பெற்றுக் கொள்ள முடியும். 18 வயது முதல் 65 வரை உள்ள யார் வேண்டுமானாலும் இதில் சேரலாம் . விண்ணப்ப படிவம், முகவரி சான்று நகல் போன்ற காகித பயன்பாடு இன்றி தபால்காரர் கொண்டு வரும் ஸ்மார்ட்போன், விரல் ரேகை பதிவு மூலமாக டிஜிட்டல் முறையில் பாலிசி பெற முடியும்.
விபத்தால் ஏற்படும் உயிரிழப்பு, நிரந்தர முழு ஊணம், நிரந்தர பகுதி ஊணம், பக்கவாதம் போன்றவற்றுக்காக 10 லட்சம் ரூபாய்க்கு விபத்து காப்பீடு செய்யப்படுகின்றது. விபத்து பாதிப்பில் உள் நோயாளிகளுக்கு 60,000 வரையும், புறநோயாளிகளுக்கு ₹30,000 வரை வசதி பெறலாம். விபத்து மரணம், பக்கவாதம் ஏற்பட்டவர்களின் குழந்தைகளின் கல்வி செலவுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 18-65 வயதுடையவர்கள் 7399 செலுத்தி இந்த திட்டத்தில் இணையலாம்.