Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரூ. 4 1/2 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள்…. உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு…. சைபர் க்ரைம் போலீஸ் அதிரடி….!!!

காணாமல் போன செல்போன்களை காவல்துறையினர் மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் சைபர் க்ரைம் காவல்துறையினரிடம் செல்போன்கள் காணாமல் போனதாக புகார்கள் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் காணாமல் போன 51 செல்போன்களை கண்டுபிடித்துள்ளனர். இதன் மொத்த மதிப்பு 4 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் ஆகும். இந்த செல்போன்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவ பிரசாத் உரிமையாளர்களிடம் வழங்கினார். இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அதில் கடந்த ஒரு மாதத்தில் பொதுமக்களிடம் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு பேசி வங்கி கணக்கு கணக்கு எண் மற்றும் ஓடிடி உள்ளிட்ட விவரங்களை வாங்கி நுதன முறையில் பணமோசடி செய்துள்ளனர். இந்த மோசடி கும்பளிடம் இருந்து 1,60,730 ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனவே வங்கியில் இருந்து தொடர்பு கொண்டு வங்கி நம்பர் உள்ளிட்ட விவரங்களை யாரேனும் கேட்டால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றார். மேலும் மோசடி தொடர்பான வழக்குகளை https://www.cybercrime .gov.in என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்றும், 1930 என்ற தொலைபேசி நம்பரிலும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |