நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இந்த காலகட்டத்தில் கொரோனா பரவி விடுமோ என்ற பயத்தில் மக்கள் வெளியில் சென்று வருவதற்கு பைக் மற்றும் கார்களையே பெரும்பாலும் பயன்படுத்த விரும்புகின்றனர். இந்நிலையில் கார் வாங்க வேண்டும் என்று விரும்பினால் அதற்கான போதிய பட்ஜெட்டில் இல்லாமல் இருக்கலாம்.
கார் வாங்க ஆசை இருந்தும் கையில் முழு தொகை கிடையாது என்று நினைத்தால் அந்த கவலையை விட்டுவிடுங்கள். கையில் பணம் இல்லாமல் கார் வாங்கும் வாய்ப்பு இப்போது வந்துள்ளது. கொரோனா காலத்தில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அனைத்தும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்ததன் காரணமாக கார் விற்பனை மந்தமாக உள்ளது. இந்த இக்கட்டான சூழலில் கார் விற்பனையை மீண்டும் உயர்த்துவதன் காரணமாகவும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையிலும் சிறப்பு திட்டம் ஒன்றை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் டிகோர், டியாகோ, நெக்ஸான், ஹேரியர் உள்ளிட்ட கார்களை குறைந்த விலைக்கு வாங்கலாம் என அறிவித்துள்ளது. டாடா டிகோர் காரை மாதம் ரூ.4,111 ஈஎம்ஐ தொகையில் வாங்கலாம். அதுமட்டுமன்றி தள்ளுபடிச் சலுகையும் வழங்கப்படுகிறது. ரூ.20,000 தள்ளுபடி, ரூ.15,000 எக்சேஞ்ச் போனஸ் போன்ற சலுகைகளும் வழங்கப்படுகின்றன.