தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின் மக்களை கவரும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு மத்தியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக செய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் குறிப்பிட்டவர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்து வருகிறது.
இந்நிலையில் திருக்கோவில்களில் மாத சம்பளம் இன்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு 4000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பட்டாச்சாரியார்கள் உள்ளிட்ட பிற பணியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப் பொருட்களும் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.