வி (வோடா போன் ஐடியா) நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் பிரீபெய்டு சலுகைகளையும் அறிவித்து வருகிறது. இந்நிலையில் தற்போது புதிய பிரீபெய்டு சலுகைகளை அறிவித்துள்ளது. இதன்படி ரூபாய் 449 க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 4 ஜிபி டேட்டா மற்றும் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற வாய்ப்புகளை வழங்குகிறது.
இதில் 56 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 100 எஸ்எம்எஸ்கள், இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை வரம்பற்ற டேட்டாவை வழங்குகிறது. வி movie’s மற்றும் டிவி வசதியையும் வழங்குகிறது.