நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நாங்கள் ஏற்கனவே சொல்லியிருந்தோம். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்து ஒரு வருட காலம் ஆகி இருக்கிறது. திராவிட மாடல் ஆரசு என்று அனைத்து இடத்திலும் கூட அதனுடைய தலைவர்கள் சென்று பேசிக் கொண்டிருக்கிறார்கள் மக்களிடையே…. அதே நேரத்திலே ஆட்சிக்கு வந்து இந்த ஒரு வருட காலத்திலே லஞ்ச லாவண்யம், ஊழல் அனைத்து இடத்திலும் தலைவிரித்தாடுகின்றது என்ற குற்றசாட்டை பாரதிய ஜனதா கட்சி வைத்திருந்தது.
முதல்வர் குடும்பம்:
பல இடத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதை சரி செய்வதாக சொல்லி இருந்தாலும் கூட, அது எங்கேயும் கூட சரி செய்யப்படாமல் அப்படியே தான் நடந்து கொண்டு இருக்கிறது. இதில் பல அமைச்சர்களுக்கு….. குறிப்பாக முதலமைச்சர் உடைய குடும்பத்துக்கும் கூட நேரடியாக நிறைய இடத்தில் தொடர்பு வருவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
2 விஷயம் சொல்லுறோம்:
இன்று பாரதிய ஜனதா கட்சி இரண்டு விஷயங்களை மக்கள் மன்றத்திலே, பத்திரிக்கையாளர் சந்திப்பு மூலமாக தெரிவிப்பதற்கு உங்களை அழைத்து இருக்கின்றோம்.முதல் விஷயம் கர்ப்பிணி பெண்கள் அம்மா நியூட்ரிசன் கிட்டை பல காலமாக அரசு கொடுத்துக்கொண்டு வருகின்றது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசில் இருந்து இது நடந்து கொண்டு வருகின்றது.
அம்மா பெயர் நீக்கம்:
அம்மா நியூட்ரிசன் கிட்டில் திமுக அரசு வந்த பின்பு ”அம்மா” என்ற வார்த்தை நீக்கிவிட்டு நியூட்ரிஷன் கிட்டாக வழங்குகின்றார். இந்த அம்மா நியூட்ரிசன் கிட்டில் என்னெனென இருக்கின்றது என பார்த்தீர்கள் என்றால்…. கர்ப்பிணி பெண்களுக்கு மதர்ஸ் ஹெல்த் மிக்ஸ் அதில் இருக்கும். அல்பெண்டசால் என்ற ஒரு டேப்லெட் இருக்கும்.
8 பொருட்கள் இருக்கும்:
ஒரு பிளாஸ்டிக் கப் இருக்கும். ஒரு டவல் இருக்கும். ஆவின் நிறுவனத்தினுடைய நெய் இருக்கும். பேரிச்சபழம் இருக்கும். இது அனைத்தும் வைத்துக் கொள்வதற்கு ஒரு பிளாஸ்டிக் டப்பா, பிளாஸ்டிக் கைப்பிடியோடு இருக்கும்.இதில் மிக மிக முக்கியமானது மதர் ஹெல்த் மிக்ஸ். இது தான் ரொம்ப முக்கியமானது. கர்ப்பிணி பெண்களுக்கு நம்முடைய அரசு வழங்குகிறது. அவர்களுக்கு போதிய ஊட்டச் சத்து வேண்டும் என்பதற்காக….
பப்ளிக் ஹெல்த் அண்ட் பிரெவேன்டிவ் மெடிசின்:
இப்போது திமுக அரசு வந்த பின்பு டிபார்ட்மென்ட் ஆஃப் பப்ளிக் ஹெல்த் அண்ட் பிரெவேன்டிவ் மெடிசின்….. எப்படி இந்த நியூட்ரிசன் கிட்டை முறையாக இன்னும் செம்மைப்படுத்தலாம்… நன்றாக எடுத்துச் செல்லாம் என்று மீட்டிங் போட்டுக் கொண்டே இருக்கின்றார்கள். இவங்க போட்ட முதல் மீட்டிங் பார்த்தீர்களென்றால் மார்ச் மாதம்.
மீட்டிங்:
மார்ச் மாதத்தில் இவர்கள் முதல் மீட்டிங் போட்டு…. மார்ச் 8ஆம் தேதி, 15 ஆம் தேதி டிபார்ட்மென்ட் ஆஃப் பப்ளிக் ஹெல்த் அண்ட் பிரெவேன்டிவ் மெடிசின்…. இந்த நியூட்ரிஷன் ஹிட்டில் என்ன பொருள் எல்லாம் வைக்கலாம் ? என்ன பொருள் எல்லாம் நீக்கலாம் ? என பேசுறாங்க. இதற்க்கு முன்பு இருந்த 8 பொருட்களில் புரோப்பியல் ஹெல்த் மிக்ஸ் என ஒரு தனியார் நிறுவனத்தின் பொருள் இருந்தது.
டெக்னிக்கல் கமிட்டி:
டிபார்ட்மென்ட் ஆஃப் பப்ளிக் ஹெல்த் அண்ட் பிரெவேன்டிவ் மெடிசின் மாநில திட்டக்குழு துணை தலைவர் தலைமையில் டெக்னிக்கல் கமிட்டி அமைத்து, அதுல பிரைவேட் கம்பெனி உடைய புரோப்பியல் ஹெல்த் மிக்ஸ் வேண்டாம். அதற்கு பதிலாக ஆவின் ஹெல்த் மிக்ஸ். அரசு நிறுவனமான ஆவின் நிறுவனத்தினுடைய ஹெல்த் மிக்ஸ்ஸை பயன்படுத்த வேண்டும். மொத்த பொருளிலே இது ரொம்ப காஸ்ட்லி. மொத்த பொருளில் விலையில் 80 சதவீதம் இந்த ஹெல்த் மிக்ஸ்சுக்கு மட்டுமே அரசு கொடுத்து வாங்குது.
பிரைவேட் நிறுவன மிக்ஸ் வேண்டாம்:
8ஆம் தேதி நடந்த மீட்டிங்கில் ஆவின் பொருளை சேர்க்கலாமா என ஆலோசித்து, 15-ஆம் தேதி நடந்த மீட்டிங்கில் ஆவின் பொருளின் தரத்தை பார்த்துவிட்டு, சேர்க்கலாம் என்று முடிவெடுத்தார்கள்.அதன்பின்பு மார்ச் 31ஆம் தேதி மார்ச் 2022 ல் நடந்த மீட்டிங்கில் இறுதி முடிவெடுத்து, டெக்னிக்கல் கமிட்டி அப்ரூவல் வாங்கி, அந்த புரோப்பியல் ஹெல்த் மிக்ஸ் பிரைவேட் கம்பெனி மிக்ஸ்ஸை எடுத்துவிட்டு,
ஆவின் ஹெல்த் மிக்ஸ் சேர்ப்பு:
தமிழக அரசின் நிறுவனமான ஆவின் ஹெல்த் மிக்ஸ்ஸை உள்ளே கொண்டு வந்து, இதனுடைய விலையை குறைப்பது கூட முயற்சி எடுத்து, பரிந்துரை பண்ணி வைத்திருந்தார்கள். மொத்தமாக 23 லட்சத்து 88 ஆயிரம் கிட் வாங்குகின்றோம் இந்த நியூட்ரிசன் கிட்டை தமிழக அரசு இரண்டு வருடத்திற்கு வாங்குகிறார்கள். இதில் மதர் ஹெல்த் மிக்ஸ் என்பது பிரைவேட் கம்பெனி.
மீண்டும் மீட்டிங் போட்டு:
டிபார்ட்மென்ட் ஆஃப் பப்ளிக் ஹெல்த் அண்ட் பிரெவேன்டிவ் மெடிசின், மாநில திட்டக்குழு துணை தலைவர் தலைமையில் டெக்னிக்கல் கமிட்டி அமைத்து, மதர் ஹெல்த் மிக்ஸ்ஸை பிரைவேட் கம்பெனிக்கு கொடுக்காமல், ஆவின் நிறுவனத்துக்கு கொடுக்கவேண்டும் என்று சோதனை செய்து அதை அப்புரூவல் பண்ணி அனுப்பி விட்டார்கள். ஆனால் மிகவும் விசித்திரமாக… ரொம்ப ரொம்ப விசித்திரமாக….. மார்ச் மாதத்தில் இதில் இறுதி முடிவு எடுத்துக் கொடுத்த பிறகு…. ஏப்ரல் மாதத்தில் அரசினுடைய நிர்ப்பந்தம் காரணமாக மறுபடியும் இதே கமிட்டியை மறுபடியும் கூட வைக்கிறார்கள்.
டெண்டருக்கு முன்பாக:
ஏப்ரல் 8ஆம் தேதி இந்த கமிட்டி எல்லா பொருளையும் இதே மாதிரி எடுத்துக் கொள்கின்றோம். ஆனால் இந்த கடைசி பொருளை மட்டும்… மூன்று முறை அமர்ந்து, மார்ச் மாதத்தில் 60 சதவீதம் ஹெல்த் மிக்ஸ் இன் விலையை குறைக்க வேண்டும் என்று முடிவு எடுத்து அமர்ந்து, மார்ச் 31ம் தேதி இறுதி முடிவு எடுத்ததை, ஏப்ரல் 8ஆம் தேதிக்கு டெண்டருக்கு முன்பாக ரிவர்ஸ் செய்கிறார்கள். அதற்கு காரணத்தை குற்றச்சாட்டாக வைக்கின்றோம்.
8 நாட்கள் கழித்து:
எட்டு நாட்கள் கழித்து எதற்காக ரிவர்ஸ் செய்கிறார்கள் ?என்று பார்த்தீர்கள் என்றால்…. இந்த பிஎல் மதர்ஸ் ஹெல்த் மிக்ஸ் என்பது ஆவின் நிறுவனம் கொடுப்பதை விட 60% விலை அதிகம்.இவர்கள்தான் தொடர்ச்சியாக சப்ளை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த எட்டு ஹெல்த் மிக்ஸ்…. நியூட்ரிஷன் கிட்டில் வரக்கூடிய 8 பொருட்களையும் சப்ளை செய்வது ஒரு தனியார் நிறுவனம்.
பொங்கல் தொகுப்பு:
பொங்கல் தொகுப்பில் மாநில அரசுக்கு கொடுத்த எல்லாப் பொருளுமே கேந்திரிய பந்தார் மூலமாக தான் சப்பிளை ஆச்சு. அந்த கேந்திரிய பந்தாருக்கு அதிகப்படியான பொருட்களை கொடுத்து நியூட்ரிஷன் கிட் கொடுக்கக்கூடிய அதே தனியார் நிறுவனம்தான். கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான இந்த ஊட்டச்சத்து பொருளையும் சப்ளை பண்ணுது. பொங்கல் தொகுப்பு யார் சப்பிளை செய்தார்களோ, அதே நிறுவனம் தான் இதையும் சப்பிளை செய்யுது.
60% அதிக விலை:
அந்த நிறுவனம் ஒரு பிரைவேட் கம்பெனியோடு ஒப்பந்தம் போட்டு pl ஹெல்த் மிக்ஸ் 60% அதிகமான ரேட்டில் கொடுத்திருக்கிறார்கள். அரசுக்கு இதன் மூலமாக 45 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அடுத்தது ரொம்ப விசித்திரமாக பார்த்தீர்கள் என்றால்…. கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்கக்கூடிய கிட்டில்,”அயர்ன் சிறப்பு” என்பது மிக முக்கியமானது. கர்ப்பிணி தாய்மார்களுக்கு தேவையான ஊட்டச்சத்தில் ”அயர்ன் சிறப்பு” வருது.
அயர்ன் சிரப்:
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மாநில அரசினை மெடிகல் சப்ளை டிபார்ட்மெண்ட் இதே 200ml ”அயர்ன் சிறப்பு” பை 42 ரூபாய்க்கு வாங்குகின்றார்கள். ஆனா இதுல தனியார் நிறுவனம் சப்பிளை செய்யுற ”அயர்ன் சிரப்” 224 ரூபாய் . அதாவது 180 ரூபாய் ஒரே அரசியல் மெடிகல் சப்ளை டிபார்ட்மெண்ட்ல தமிழ்நாடு அரசு வாங்கும்போது அது 42 ரூபாய்…
77 கோடி இழப்பு:
அதே பொருளை பிரைவேட் நிறுவனம் ஒரு பேக்ஜ் ஆக மாநில அரசு கொடுக்கும் போது இந்த டெண்டரில் அது வந்து 224 ரூபாய். இதுல முப்பத்தி இரண்டு கோடி ரூபாய் நமது மாநில அரசுக்கு இதன் மூலம் நட்டம் ஏற்படுகின்றது. ஆக மொத்தம் 77 கோடி ரூபாய் இந்த இரண்டு பொருட்களில் மட்டும்…. ஒரு பொருளை மெடிக்கல் சப்ளை டிபார்ட்மெண்டில் வாங்கி இருக்கலாம். இன்னொரு பொருளை ஆவின் நிறுவனம் வாங்கின விலையைவிட 60% குறைச்சலாக 40% விலைக்கு கொடுப்பதாக ஆவின் நிறுவனம் சொல்லியும் கூட… அதை டெக்னிக்கல் கமிட்டி ஏற்றுக்கொண்டும் கூட அதை ஏன் மாநில அரசு வாங்கவில்லை. இதற்கான ஆதாரத்தை நான் பத்திரிக்கைக்கு கொடுக்கின்றேன்.
ஆவின் நல்ல நிறுவனம்:
டெண்டர்போடுவதற்கு முன்னாடி ஏப்ரல் 8ஆம் தேதி மறுபடியும் இதற்காக ஒரு கமிட்டி அமைத்து, மறுபடியும் அவர்கள் கூடி கடைசியாக முடிவு எடுத்துள்ளார்கள். இதில் உள்ள கடைசி வார்த்தைகளை படித்தீர்கள் என்றால் தெரியும்.. ஆவின் ரொம்ப நல்ல பொருள் தான். ஆனால் இருந்தாலும் மாநில அரசு இந்த முடிவு எடுக்கட்டும் என்று கமிட்டி மாநில அரசுக்கு இந்த பொறுப்பை கொடுக்கிறோம் அப்படின்னு அந்த கமிட்டியை டைப் பண்ணி கடைசி பாராவில் வாங்க வச்சிருக்காங்க.
ரூபாய் 450 கோடி:
இதன் மூலமாக மாநில அரசுக்கு ஏற்பட்டிருக்கும் 77 கோடி ரூபாய். அதே நேரத்தில் இந்த தனியார் நிறுவனம் எடுத்து இருக்க கூடிய மொத்த காண்ட்ராக்ட் மதிப்பு 450 கோடி ரூபாய். 23 லட்சம் நியூட்ரிசன் கிட்டின் மொத்த விலை 450 கோடி ரூபாய். அதாவது பொங்கல் தொகுப்பில் மிக மோசமான பொருளை கொடுத்து, அதன் மூலமாக மக்கள் இறந்தே போயிருவாங்கனு பயந்த ஒரு நிறுவனம்…
முதல் குற்றசாட்டு:
கர்ப்பிணி தாய்மார்களுக்கு நியூட்ரிஷன் கிட்டில் தரம் குறைவான பொருளைக் கொடுப்பது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ? அதை விட தரமாக இருக்க கூடிய ஆவினை ஏன் நம்முடைய மாநில அரசு வேண்டாம் என்று சொன்னார்கள் ? இது எங்களுடைய முதல் குற்றசாட்டு.இதற்கு மாநில அரசும் நிச்சயமாக பதில் சொல்ல வேண்டும்.
டெண்டர் இரத்து:
உடனடியாக இந்த டெண்டர் ஓபன் ஆகாம இருக்கு.எந்த நேரமும் இந்த டெண்டர் ஓபன் செய்யப்படும். இந்த டெண்னடரை உடனடியாக இரத்து செய்ய வேண்டும். உடனடியாக இரத்து செய்துவிட்டு, இந்த pro-pl மிக்ஸ்சுக்கு பதிலாக மாநில அரசு 30.03.2022ல் டிபார்ட்மென்ட் ஆஃப் பப்ளிக் ஹெல்த் அண்ட் பிரெவேன்டிவ் மெடிசின் எடுத்த முடிவின்படி ஆவின் நிறுவனத்திற்கே அதை கொடுத்து…..
ஆவினுக்கே கொடுங்க;
எல்லாருமே ஆவின் பால்லை தைரியமாக வாங்கி குடிக்கும் போது ஆவின் நிறுவனத்தினுடைய ஹெல்த் மிக்ஸ்ஸை ஒரு தாய்க்கு கொடுப்பதிலே மாநில அரசுக்கு என்ன பிரச்சனை ? அதனால் உடனடியாக டெண்டரை கேன்சல் செய்துவிட்டு ஆவின் நிறுவனத்துக்கு இதை கொடுக்க வேண்டும் என்பது பாரதிய ஜனதா கட்சியின் கோரிக்கை என தெரிவித்தார்.