டாட்டா பிளே ரூபாய் 49 விலையில் புதிய ஸ்டார்டர் அறிமுகம் செய்துள்ளது.
டாட்டா ஸ்கை தற்போது டாடா பிளே என்று பெயர் மாற்றப் பட்டிருக்கும் டிடிஎச் சேவை வழங்கும் நிறுவனம் புதிதாக வின்ஸ்டார் பேக் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. இது குறைந்த விலையில் OTT பலன்களை வழங்கும். டாடா பிளே பின்ஜ் ஸ்டார்டர் பேக் இரோஸ் நௌ, ஷீமாரோமி, ஜீ5 மற்றும் ஹங்காமா என நான்கு OTT தளங்களுக்கான சந்தாவை வழங்குகிறது. இதனை ஆக்டிவேட் செய்ததும், பயனர்கள் OTT தரவுகளை தங்களின் சாதனங்களில் உள்ள செயலியில் பார்த்து ரசிக்க முடியும்.
மிகவும் குறைந்த விலையில் சலுகை என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இதன் விலை ரூ.49 ஆகும். இதற்கான வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். வின்ஸ்டார் 149 ரூபாய் மற்றும் 199 விலைகளில் பேசிக் மற்றும் பிரீமியம் சலுகைகளை கொண்டு வழங்கப்படுகின்றது. குறிப்பிட்ட OTT தளங்களின் நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்க பயனர்கள் டாடா பிளே பின்ஜ் செயலியை சம்பந்தப்பட்ட சாதனங்களில் இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும். முன்னதாக டாடா பிளே பின்ஜ் சலுகை டிரீம் டிடிஹெச் என அழைக்கப்பட்டு வந்தது.