Categories
தேசிய செய்திகள்

ரூ.5ல் 60 கி.மீ கார் பயணம்…. 67 வயதில் முதியவர் தயாரித்த அசத்தலான கார்….!!!

கேரளாவில் கொல்லம் பகுதியை சேர்ந்த நபர் சொந்தமாக ஒரு எலக்ட்ரிக் காரை தயாரித்துள்ளார்.

கேரளாவின் கொல்லம் பகுதியை சேர்ந்த 67 வயது முதியவரான ஆண்டனி, தினமும் 30 கிலோ மீட்டர் பயணம் செய்யும் பழக்கம் கொண்டவர்கள். இதனால் அவர் கார் ஒன்றை வாங்குவதற்கு அவர் நினைத்தார். ஆனால் அதன் விலை 1200000 என்பதால் அதை அவரால் வாங்க முடியவில்லை. இதையடுத்து அவர் 4.5 லட்சம் செலவில் சொந்தமாக ஒரு எலக்ட்ரிக் காரை தயாரித்துள்ளார். வெறும் 5 ரூபாய் செலவில் அதிகபட்சம் மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில், 60 கிலோ மீட்டர் தூரம் வரை செல்கின்றது என்று அவர் தெரிவித்துள்ளார். இவரது முயற்சிக்கு அனைவரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |