மத்தியபிரதேச மாநிலத்தில் மிகப் பெரிய அளவில் கள்ள நோட்டு சிக்கியிருக்கும் விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம், பாலாகாட் என்ற பகுதியில் கள்ள நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து இரண்டு நாட்களாக தீவிர சோதனை நடத்தி வந்தனர். அந்த சோதனையில் கள்ள நோட்டு கும்பலை கையும் களவுமாக பிடித்தனர். கள்ள நோட்டு புழக்கத்தில் விட்டதாக 8 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
மேலும் இதில் 2 பேர் அண்டை மாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்களிடமிருந்து 5 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இவை அனைத்தும் 10 முதல் 2000 வரை உள்ள நோட்டுகள் ஆகும். இதை எப்படி மச்சி அடித்தார்கள். இதற்குப் பின்னர் யார் உள்ளார்கள் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.