Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ரூ. 5 கோடி மதிப்பீட்டில்…. புதிதாக கட்டப்படும் குளிர்பதன கிடங்கு…. அமைச்சர்கள் திடீர் ஆய்வு….!!!!

குளிர்பதன கிடங்கை அமைச்சர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் பகுதியில் காய்கறி மார்க்கெட் அமைந்துள்ளது. இந்த மார்க்கெட்டை சேர்ந்த விவசாயிகள் கடந்த 20 வருடங்களாக குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என அரசிற்கு கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை அரசாங்கம் ஏற்று தற்போது ரூபாய் 5 கோடி நிதி ஒதுக்கீட்டில் குளிர் பதன கிடங்கு அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கிடங்கில் சுமார் 1000 டன் காய்கறிகள் வரை இருப்பில் வைத்துக் கொள்ளலாம். இந்நிலையில் குளிர் பதன கிடங்கு அமைக்கும் பணிகளை அமைச்சர் சக்கரபாணி மற்றும் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது எம்பி வேலுசாமி மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் இருந்தனர்.

இந்த ஆய்வின் போது அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் நாமக்கல், சேலம், பெரம்பலூர், அரியலூர், திருப்பூர், கரூர் மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் சுமார் 5000 ஏக்கர் பரப்பளவில் கண்வலி கிழங்குகள் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த கிழங்கின் விதைகள் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. இந்த விதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதன் மூலம் பல்வேறு வகையான நோய்களுக்கு மருந்தும் கண்டுபிடிக்கப்படுகிறது. ஆனால் கிழங்குகளை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு போதிய வருமானம் கிடைக்காமல் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இது தொடர்பாக அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளோம். அதோடு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைக்க மத்திய அரசு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு மத்திய வேளாண்மை துறை செயலாளருக்கும் கடிதம் எழுதி அனுப்பப்பட்டுள்ளது. மேலும்விதைகளை தேசிய கூட்டுறவு விற்பனை நிலையம் இணையதளத்தின் மூலம் விவசாயிகளிடமிருந்து வாங்கினால் இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகளால் லாபம் பெற முடியும் என்றும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

Categories

Tech |