விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எஸ்.வி.பி.என்.எஸ் தெருவில் கார்த்திகேயராஜா அருணா மகா ஸ்ரீ தம்பதியினர் வசித்து வந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில் அருணா போலீசருக்கு எழுதிய கடிதத்தில், 5 லட்ச ரூபாய் கடன் தருவதாக கூறி மகாராஜா என்பவர் எங்களிடம் இருந்து முன்பணம் வாங்கினார். ஆனால் அவர் முன்பணத்தை திருப்பி தராமலும், கடனை தராமலும் எங்களை ஏமாற்றிவிட்டார் என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மகாராஜாவை பிடித்து விசாரித்தனர்.
அந்த விசாரணையில் பேஸ்புக் மூலம் மகாராஜா தருவது கடன் குறித்து அருணா அறிந்தார். இதனால் 5 லட்ச ரூபாய் கடன் தருமாறு அருணா மகாராஜாவிடம் கேட்டுள்ளார். அதற்கு மகாராஜா கேட்ட 6000 ரூபாய் முன் பணத்தையும் அருணா அனுப்பியுள்ளார். ஆனால் கடன் கொடுக்காமலும், முன் பணத்தை திரும்பி தராமலும் மகாராஜா ஏமாற்றியுள்ளார். இதனால் அருணா தனது கணவருடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் மகாராஜாவை கைது செய்தனர்.