பொது வருங்கால வைப்புநிதி நீண்டகால முதலீட்டிற்கு சிறந்த திட்டம் ஆகும். இவற்றில் குறைந்தபட்சம் ரூபாய்.500 முதல் அதிகபட்சம் ரூபாய். 1,50,000 வரை சேமிக்கலாம். இத்திட்டத்தில் 7.1 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. அத்துடன் இந்த திட்டத்தில் வருமானவரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வரி விலக்கும் இருக்கிறது.
இத்திட்டத்திற்கான முதிவுகாலம் 15 வருடங்கள் ஆகும். இது ஒரு சிறந்த சேமிப்புதிட்டம் மட்டுமல்ல, எளிதாக கடன் பெறும் திட்டமும் ஆகும். இவற்றில் 3 முதல் 6 வருடம் வரையிலும் கடன் பெற்றுகொள்ளலாம். இதற்கு வட்டி விகிதம் 1 சதவீதம் மட்டுமே ஆகும். இது மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைந்த வட்டி ஆகும்.