தேசிய பென்ஷன் திட்டம் என்ற திட்டம் மத்திய அரசு தரப்பிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போதைய காலகட்டத்தில் பண நெருக்கடி அதிகமாக உள்ளது. அதுவும் வயதான காலத்தில் நிறைய பேர் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறார்கள். ஒருவேளை உங்களுடைய வாழ்க்கைத் துணைக்கு அந்த மாதிரி ஒரு நிலைமை ஏற்படாமல் இருக்க இப்போதே தயாராகுங்கள். தேசிய பென்சன் திட்டம் என்ற திட்டம் மத்திய அரசு தரப்பிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவொரு முதலீடு சார்ந்த பென்ஷன் திட்டம் ஆகும்.
கடைசிக் காலத்தில் இத்திட்டத்தின் மூலமாக ஒரு தொகை பென்ஷனாக வந்து கொண்டே இருக்கும். இப்போது உங்களுடைய மனைவிக்கு 30 வயது என்றால் அவரது பெயரில் முதிர்வு காலம் வரை அதாவது மொத்தம் முப்பது ஆண்டுகளுக்கு நீங்கள் சேமிக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் நீங்கள் ரூபாய் வரை முதலீடு செய்தால் முதிர்வு காலத்தில் கையிலிருக்கும் பென்சன் தொகை1,11,98,471.8 சதவீத வட்டியில் வைத்துப் பார்த்தால் ரூ.67,19,083 ரிட்டன் கிடைக்கும்.
இதன்படி, உங்களுடைய மனைவிக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.44,793 பென்சன் கிடைக்கும்.18 முதல் 65 வயது வரை உள்ள எந்தவொரு இந்தியக் குடிமகனும் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். ஒருவரது பெயரில் நிறைய கணக்குகள் தொடங்க முடியாது. உங்களுடைய மனைவியின் பெயரில் நீங்கள் கணக்கு தொடங்கி அவர்களுக்காக நீங்கள் பணத்தைப் போடலாம்.