Categories
தேசிய செய்திகள்

ரூ. 50,000… ரயில்வே ஊழியரின் வீரதீர செயலை பாராட்டி பரிசு…!!

தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை நொடிப்பொழுதில் காப்பாற்றிய ரயில்வே ஊழியரின் வீர செயலை பாரட்டி ரூபாய் 50 ஆயிரத்தை ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் வழங்கியுள்ளார்.

மும்பை மாநிலம் வாங்கனி ரயில் மேடையில் நடந்து கொண்டிருந்த சிறுவன் ஒருவன் தவறி ரயில் தண்டவாளத்தில் விழுந்து விட்டான். அப்போது ஒரு விரைவு ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது இதை பார்த்த ரயில்வே ஊழியர் ஒருவர் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நொடிப்பொழுதில் அங்கு சென்று அந்த குழந்தையை காப்பாற்றி தானும் உயிர் பிழைத்தார். இவரின் இந்த செயல் ரயில்வே நிலையத்தில் உள்ள சிசிடிவியில் பதிவாகியிருந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி பலரது பாராட்டையும் பெற்றது. தற்போது இவரின் வீரதீர செயலைப் பாராட்டி ரூபாய் 50,000 ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.

Categories

Tech |