உத்திரபிரதேசம் மாநிலத்தில் மனோஜ் ஆனந்த் என்பவர் தங்க மாஸ்க்கை தயாரித்து அணிந்து வலம் வருகிறார்.
இந்தியாவில் பரவி வந்த கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முக்கியமாக மக்கள் அனைவரும் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், அடிக்கடி கைகளை கழுவுதல், கிருமிநாசினி பயன்படுத்துதல் போன்றவற்றை கடைப்பிடிக்க வலியுறுத்தி வருகின்றது.
அதுமட்டுமில்லாமல் முக கவசம் என்பது நாம் அன்றாட தேவைகளில் ஒன்றாகவே தற்போது மாறிவிட்டது. ஆனால் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மனோஜ் ஆனந்த் என்பவர் தங்கத்தில் மாஸ்க் தயாரித்து அதனை அணிந்து கொண்டு வலம் வருகிறார். அந்த மாஸ் 5 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கொண்டு உருவாக்கப் பட்டதாக கூறுகிறார் இதனால் உள்ளூர் வாசிகள் அனைவரும் இவரை கோல்டன் பாபா மற்றும் தங்க பாபா என்று அழைக்கின்றனர். தங்கத்தின் மீது உள்ள ஈர்ப்பு காரணமாக அதிக நகைகளை அணிவதாக அவர் தெரிவித்துள்ளார்.