தமிழக போக்குவரத்துத் துறையில் ஐந்து ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் குற்றம்சாட்டியுள்ளது.
சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் முருகன் வெங்கடாசலம் 5 பேர் கொண்ட இடைத்தரகர்கள் குழு போக்குவரத்து துறை இயக்குவதாகவும், முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், தமிழக போக்குவரத்துத் துறையில் சுமார் 5000 கோடி ரூபாய் ஊழல் சதி செயல் நடந்துக் கொண்டிருக்கிறது. தமிழக போக்குவரத்து துறை ஆணையர் அவர்கள் நீதிமன்ற உத்தரவான வேகக்கட்டுப்பாட்டு கருவி, சாலை வரி, இடைக்கால பிரதிபலிப்பு ஸ்டிக்கர், ஜிபிஎஸ் கருவி உத்தரவை அமல்படுத்த வில்லை.
போக்குவரத்து துறை ஆணையர் அவர்கள் எங்களுடைய லாரி உரிமையாளர்களின் சங்கங்களில் லெட்டர் பேடை திருடி அதிலே போக்குவரத்து துறை ஆணையர், இணை ஆணையர், கூடுதல் ஆணையர் அனைவரும் கையொப்பமிட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்கள். இந்த கடிதம் தொடர்பாக கேட்டால் விளக்கம் தர மறுக்கிறார்கள். இதற்க்கு தார்மீக பொறுப்பேற்று போக்குவரத்துத்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என அவர் கூறினார்.