Categories
தேசிய செய்திகள்

ரூ. 510 கோடி…”மதுபான கடைக்கு இவ்வளவு கிராக்கியா”…? போட்டி போட்டு ஏலம் கேட்ட பெண்கள்…!!

ராஜஸ்தானின் ஹனுமங்கர் என்ற மாவட்டத்தில் ஒரு மதுபான கடை ஏலம் விடபட்டது. இது காலை 11 மணிக்கு ஆரம்பித்து நள்ளிரவு வரை ஏலம் நடைபெற்ற சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஹனுமங்கர் மாவட்டத்தில் ஒரு மதுபானக்கடை உள்ளது. இந்த மதுபான கடை ஏலம் விடப்பட்டது. இதன் ஆரம்ப தொகை 72 லட்சத்தில் தொடங்கியது. இது கடந்த ஆண்டு 64 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டதால் இந்த ஆண்டு 70 லட்சத்திலிருந்து தொடங்கியது. ராஜஸ்தானில் மதுபான கடைகளை ஏலம் விடுவது பொதுவான வழக்கம். அதேபோல் இந்த தடவையும் ஏலம் விடப்பட்டது. அந்த ஏலம் ஆனது 510 கோடி வரை சென்றது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

மேலும் காலை 11 மணி அளவில் தொடங்கிய ஏலம் நள்ளிரவு தாண்டி அதிகாலை 2 மணிக்கு முடிவடைந்தது. இந்த ஏலத்தை அதே பகுதியை சேர்ந்த இரண்டு பெண்கள் வாங்கியுள்ளது. மேலும் பரபரப்பாக பேசப்பட்டது. இதில் வினோதமான விஷயம் என்னவென்றால் இதுவரை அந்த அளவுக்கு ஏலம் போனதே இல்லையாம். முன்னதாக ஏலம் விடக்கூடாது என்று முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே கூறியிருந்தார். இதையடுத்து தற்போது முதல்வர் அசோக் கெஹ்லோட் இதை மீண்டும் தொடங்கியுள்ளார்.

Categories

Tech |