ஜான்சன் அண்டு ஜான்சன் பேபி பவுடர் கேன்சரை உண்டாக்கும் தன்மையைக் கொண்டிருப்பதால், அந்நிறுவனத்திற்கு ரூ.5,359 கோடி அபராதம் விதித்துள்ளது அமெரிக்காவின் நியூஜெர்ஸி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவன பவுடரைப் பயன்படுத்தியதால், குழந்தைகளுக்கு கேன்சர் ஏற்பட்டதாக அமெரிக்காவில் 4 பேர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்குகள் நியூஜெர்ஸியிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தங்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டுமெனவும் மனுதாரர்கள் வலியுறுத்தி இருந்தனர். அந்நிறுவனம் தனது தயாரிப்பில் ஆஸ்பெஸ்டாசின் இருப்பதாக முறையாக பொதுமக்களிடம் அறிவிக்கவில்லை என்று குற்றச்சாட்டு உள்ளது.
இதுதொடர்பாக, அந்நிறுவனத்தின்மீது 16000க்கும் அதிகமான சிவில் வழக்குகள் ஏற்கனவே தொடுக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் இந்திய மதிப்பில் ரூ.5359 கோடிகளை அபராதமாக விதித்தது. ஆனால், இந்தத் தீர்ப்பை எதிர்த்துள்ள ஜான்சன் நிறுவனம், மேல்முறையீடு செய்யப்போவதாக தெரிவித்துள்ளது.