Categories
அரசியல்

ரூ.55 சேமித்தால் போதும்…. மாதம் ரூ.3000 பென்ஷன்… மத்திய அரசின் சூப்பரான திட்டம்…. ட்ரை பண்ணுங்க…!!!

மத்திய அரசின் இந்த பென்ஷன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரூபாய் 3000 பென்ஷன் வாங்க முடியும். அதைப் பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம்.

உங்களது முதிர்வு காலத்தில் உங்களிடம் பணம் இருக்குமா என்று உங்களுக்கு தெரியாது. அதனால் நீங்கள் இப்போது இருந்து உங்களின் முதிர்வு காலத்திற்கு சேமிக்க வேண்டும். அப்போதுதான் எந்தவித கஷ்டமும் இல்லாமல் நம்மால் வாழ முடியும். பென்ஷன் என்ற பெயரில் நிலையான ஒரு தொகையை ஒவ்வொரு மாதமும் நீங்கள் செலுத்திக் கொண்டு வந்தால் அது உங்களுக்கு ஓய்வு காலத்தில் மிகவும் பலனளிக்கும். மத்திய அரசு இது போன்ற பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அவற்றில் ஒன்று பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் யோஜனா திட்டம்.

இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 55 ரூபாயை நீங்கள் சேமித்து வந்தால், கடைசி காலத்தில் ஒவ்வொரு மாதமும் 3000 ரூபாய் பென்ஷன் கிடைக்கும். இது அமைப்புசாரா துறையை சேர்ந்த ஊழியர்களுக்கு சிறந்த பலனை அளிக்கின்றது. 18 வயது முதல் 40 வயது வரை உள்ள இந்தியர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன் பெற்றுக் கொள்ளலாம். அரசு பொது சேவை மையங்களில் இந்த திட்டத்தை தொடங்க முடியும். இதற்கு ஆதார ஆவணங்கள் தேவை.

கணக்கு தொடங்கிய பிறகு கார்டு ஒன்று வழங்கப்படும். அதை வைத்துக்கொண்டு ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 55 ரூபாய் முதல் அதிகபட்சம் 200 வரை சேமிக்கலாம். 60 வயதை தாண்டிய உடன் உங்களுக்கு பென்ஷன் கிடைக்கும். மாதத்திற்கு 55 ரூபாய் சேமித்தால் நீங்கள் 42 வருடங்களுக்கு இந்தத் திட்டத்தில் சேமிக்க வேண்டும். அதன்படி உங்களது முதலீடு பணம் 27 ஆயிரத்து 720 ஆக இருக்கும். நீங்கள் விரும்பினால் மாதாந்திரப் பென்ஷனுக்கு பதிலாக வருடாந்திர பென்சனை பெற்றுக்கொள்ளலாம்.

Categories

Tech |