மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே பகுதியில் ஒருவர் தன்னுடைய ஸ்கூட்டருக்கு ஷெல் பெட்ரோல் பங்கில் டேங்க் புல் செய்துள்ளார். அதற்கு 550 ரூபாய் பில் வந்த நிலையில் வாடிக்கையாளர் கூகுள் பே மூலம் பணம் செலுத்த முயற்சி செய்தார். அப்போது qr கோடு குளறுபடியால் 550 ரூபாய்க்கு பதில் 55,053 ரூபாய் தவறுதலாக பில் பதிவாகியுள்ளது. வாடிக்கையாளரும் அதனை சரியாக கவனிக்காமல் பணம் செலுத்தியுள்ளார்.
அதன் பிறகு தனது வங்கிக் கணக்கில் இருந்து 55 ஆயிரம் ரூபாய் டெபிட் ஆனதாக மொபைலுக்கு எஸ் எம் எஸ் வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக பெட்ரோல் பங்க் உரிமையாளரை தொடர்பு கொண்டு விஷயத்தை கூறி பணத்தை திரும்ப செலுத்துமாறு கேட்டு இருக்கிறார்.பின்னர் உரிமையாளரும் தன்னுடைய வங்கிக் கணக்கை சரிபார்த்துவிட்டு அந்த பணத்தை வாடிக்கையாளரின் வங்கி கணக்குக்கு திரும்ப செலுத்தியுள்ளார்.