Categories
மாநில செய்திகள்

ரூ.56 கோடி மதிப்பில் நலத்திட்ட பணிகள்…  திருப்பூர் மாவட்டத்தில் புதிய திட்ட பணிகள்… முதல்வர் அடிக்கல்…!!!

திருப்பூரில் ரூபாய் 56 கோடி மதிப்பில் நலத்திட்ட பணிகளை முதல்வர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று மாலை நடைபெற்றது. இதில் பங்கேற்ற முகஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் முடிவற்ற திட்டங்களை துவங்கி வைத்தார். இந்த விழாவில் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் மூலமாக 222 பேருக்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீடு ஆணை. மாவட்ட தொழில் மையம் சார்பில் நீட்ஸ் திட்டத்தில் 23 பேருக்கு தொழில் கடன் உதவி.

மகளிர் திட்டம் சார்பில் 1339 பேருக்கு ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மூலம் நிதி உதவி, சமூகநலத்துறை, ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் 4335 பேருக்கு 55 கோடியே 60 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

Categories

Tech |