புஷ்பா படத்தை தொடர்ந்து பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்திருக்கிறார் அல்லு அர்ஜூன். இந்த நிலையில், சிகெரெட், பான் மசாலா தயாரிக்கும் நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடிப்பதற்காக அல்லு அர்ஜூனை அனுகியிருக்கிறார்கள். அதில் நடிப்பதற்காக 6 கோடி ரூபாய் வரையில் சம்பளமும் கொடுக்க முன்வந்துள்ளதாக தெரிய வந்திருக்கிறது. ஆனால் இது போன்ற விளம்பரங்களில் நடித்து தன்னுடைய ரசிகர்கள் உள்ளிட்ட பலரையும் தவறான பாதையில் இட்டுச்செல்ல விரும்பவில்லை எனக் கூறி எந்த ஆலோசனைக்கும் உட்படாமல் உடனடியாக அதில் நடிக்க முடியாது என மறுத்திருக்கிறாராம் அல்லு அர்ஜூன்.
சினிமாவில் திரைக்கதைக்காக புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தாலும், உண்மையில் அல்லு அர்ஜூன் புகைப்பிடிக்கும் பழக்கம் அற்றவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் பரவி ரசிகர்களிடையே பெருமளவில் வரவேற்கப்பட்டும் வருகிறது.