இந்தியா இந்தி மொழியின் பயன்பாட்டை ஐ.நா.வில் விரிவுபடுத்துவதற்காக 8 லட்சம் டாலரை நிதியாக வழங்கியுள்ளது. அதாவது ஐ.நாவுக்கான இந்திய தூதரகம் இதுதொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2018-ஆம் ஆண்டில் இந்தி மொழியின் பயன்பாட்டை அதிகரிக்க இந்திய அரசு ஐ.நா. பொது தகவல் துறையுடன் உடன்பாடு செய்தது. மேலும் உலகம் முழுவதும் உள்ள இந்தி மொழி பேசும் மக்களுக்காக இந்தியில் ஐ.நா. செய்திகள் மொழிபெயர்க்கப்பட்டது.
இதற்காக ஐ.நா. சர்வதேச தொடர்புத் துறைக்கு கடந்த 2018-ஆம் ஆண்டில் இருந்து நிதி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 8 லட்சம் டாலருக்கான ( ரூபாய் 6 கோடி) காசோலையை இந்தியாவின் துணை பிரதிநிதி ரவீந்திரா சர்வதேச தொடர்புத் துறையின் துணை இயக்குனர் மிடா ஹோசலியிடம் வழங்கியுள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.