ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையில் லாரியில் கொண்டு செல்லப்பட்டு இருந்த ஆறு கோடி ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரத்தில் இருந்து பெங்களூரு நோக்கி சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்களை ஏற்றிச்சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியை கர்நாடக எல்லையான தேவ சமுத்திரம் என்ற இடத்தில் மடக்கிப் பிடித்த மர்ம கும்பல் ஓட்டுநரையும் உதவியாளரையும் தாக்கிவிட்டு செல்போனை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காஞ்சிபுரத்திலிருந்து செல்போன்களை ஏற்றிச்சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியை மடக்கி பிடித்த மர்ம நபர்கள் 15 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்களை கொள்ளையடித்து சென்றது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து போலீசிடம் புகார் அளிக்கப்பட்டது. அவர்கள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.