தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017 -ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது கருத்து வேறுபாடு காரணமாக சமந்தா, நாக சைதன்யா இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர். திரைப்படங்களில் சமந்தா கவர்ச்சியாக நடிப்பதே விவாகரத்துக்கு காரணம் என கிசுகிசுக்கப்படுகிறது . மேலும் சமந்தாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.200 கோடி கொடுக்க நாக சைதன்யா குடும்பத்தினர் முன் வந்ததாகவும், நான் நன்றாக சம்பாதிக்கிறேன், எனக்கு பணம் தேவையில்லை எனக் கூறி அதை வாங்க சமந்தா மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது .
இந்நிலையில் நாக சைதன்யாவிடமிருந்து ஒரு பங்களா வீட்டை சமந்தா வாங்கியதாக தகவல் பரவி வருகிறது. இந்த பங்களா வீட்டின் விலை ரூ.6 கோடி. திருமணமானதும் சமந்தா, நாக சைதன்யா ஹைதராபாத்தில் சொந்தமாக வீடு வாங்கி குடியேறினர். அந்த வீட்டை அதிக செலவு செய்து உள் அலங்கார வேலைப்பாடுகள் செய்தனர். விவாகரத்து அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே நாக சைதன்யா அந்த வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். மேலும் இந்த வீட்டை சமந்தாவுக்கு ஜீவனாம்சமாக நாக சைதன்யா கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது அந்த பங்களா வீட்டில் தான் சமந்தா குடியிருக்கிறார்.