Categories
மாநில செய்திகள்

ரூ.60,00000 மதிப்புள்ள சொந்த இடத்தை…. அமைச்சர் செய்த காரியம்…. முதல்வர் நெகிழ்ச்சி…!!!!

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சி எல்லைக்குட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் வாழும் மலைவாழ் மக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு கோரிக்கை மனு கொடுத்திருந்தனர். இந்த மனுவானது விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்திலும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இருப்பினும் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் எந்த ஒரு அரசு புறம்போக்கு இடமும் இல்லாததால் அரசு அதிகாரிகள் ஏதாவது இடத்தை வழங்கலாம் என்பது குறித்து ஆலோசனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த மலைவாழ் மக்களுக்காக வீட்டுமனை வழங்குவதற்காக செஞ்சி சட்டமன்ற உறுப்பினரும், மாநில சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான செஞ்சி மஸ்தான் தன்னுடைய சொந்த நிலத்தை கொடுக்க முன்வந்தார். அதன்படி செஞ்சி பேரூராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் சர்வே எண் 51/1.எ.66 சென்ட் புன்செய் என்ற நிலத்தை செஞ்சி மஸ்தான் தன்னுடைய மனைவி மற்றும் மகள்களுடன் சர்வாதிகார சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று தமிழக ஆளுநர் பெயருக்கு இலவசமாக எழுதிக் கொடுத்தார்.

இவர் எழுதி கொடுத்த இந்த இடத்தின் மதிப்பு சுமார் 60 லட்சம் என்று கூறப்படுகிறது. அவருடைய இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் செஞ்சி மஸ்தான் இந்த செயல் குறித்து அறிந்த முதல்வர் மகிழ்ச்சி அடைந்தது மட்டுமல்லாமல் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |