செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ வேலு, சேலம் எட்டு வழி சாலையை பொறுத்தவரைக்கும் அதனுடைய கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டியது முதலமைச்சர். அவர் என்ன ஆணையிடுகிறாரோ ? அதை தான் அந்தத் துறை செய்யும். அதேநேரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த தீர்ப்பின் அடிப்படையிலேயே இதுவரைக்கும் ஒன்றிய அரசு எங்களுக்கு எந்த ஒரு கடிதம், எந்த அறிவிப்பும் இல்லை.
அப்படி கடிதம் எதாவது இருந்தால் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்து, முதலமைச்சரின் ஆணையை ஏற்று பணிகள் நடைபெறும். ஏற்கனவே வந்து வெள்ளம் வந்தபோது தமிழக அரசின் சார்பாக ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட கோடி ரூபாய்க்கு பரிந்துரை செய்யப்பட்டு அனுப்பப்பட்டு இருக்கிறது. ஆனால் இதுவரை மத்திய அரசாங்கத்திடமிருந்து இன்னும் பணம் வரவில்லை, தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி கொண்டிருக்கிறோம்.
அதிலே ஒரு பகுதி நாங்கள் நெடுஞ்சாலைத்துறைக்கு பரிந்துரை செய்திருக்கிறோம். பணம் வந்தவுடன் முதலமைச்சர் எங்கள் துறைக்கு பணம் தருவார், இருந்தாலும் நாங்கள் அந்த பணத்தை எதிர்ப்பார்க்காமல் மாநில அரசின் நிதியிலிருந்து பணிகள் நாங்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம், அந்த பணமும் வந்தால் இன்னும் சாலைகளை அகலப்படுத்துவதற்கும் பயன்படுத்துவோம் என தெரிவித்தார்.