ரூ.64.154 கோடி மதிப்பில் பிரதமரின் சுயசார்பு ஆரோக்கிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
வரலாற்றில் முதல் முறையாக டிஜிட்டல் வடிவில் மத்திய நிதிநிலை அறிக்கையை மூன்றாவது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு அவர் ஆற்றிய உரையில், “கொரோனாவால் பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மக்கள் சிரமப்படாமல் இருக்க ஏழைகள் நலவாழ்வு நிதி உதவியை பிரதமர் மோடி தொடங்கினார்.
மேலும் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் மூலம் மத்திய அரசுக்கு 140 கோடி மிச்சமாகும். பொது முடக்கத்தை அமல்படுத்தாமல் இருந்திருந்தால் கொரோனாவால் மிகப் பெரும் சேதத்தை சந்தித்திருக்க நேர்ந்திருக்கும். பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. இதையடுத்து மத்திய பட்ஜெட்டை அறிவித்து வருகிறார்.
அதில், ரூ.64.154 கோடி மதிப்பில் பிரதமரின் சுயசார்பு ஆரோக்கிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். சுகாதாரத் திட்டங்களுக்கு ரூ.54,584 கோடியில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். தற்காப்பு, குணப்படுத்துதல், சரியான சிகிச்சை அளித்தல் ஆகிய மூன்று அம்சங்களில் சுகாதாரத்துறை கவனம் செலுத்துகிறது. கொரோனா தடுப்பூசிக்கு ரூபாய் 35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.