Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ரூ 6,50,000 அபராதம்..! மைதானத்திற்குள் ஓடி வந்து ரோஹித்தை பார்த்து அழுத்த சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்..!!

ரோஹித் சர்மாவை சந்திக்க மைதானத்தில் அத்துமீறி நுழைந்த ரசிகர் ஒருவருக்கு 6.5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஐசிசி 8ஆவது டி20 உலக கோப்பை தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் முதல் கட்டமாக தகுதி சுற்று போட்டிகள் அனைத்தும் 21ஆம் தேதியுடன் முடிவடைந்தது, பின் கடந்த 22 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த சூப்பர் 12 சுற்று போட்டிகள் நேற்றோடு முடிவடைந்தது. குரூப் 1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என 12 அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடியது. இதில் குரூப் 1 பிரிவிலிருந்து இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் குரூப் 2 பிரிவிலிருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது. தொடர்ந்து நவம்பர் 10 வியாழன் அன்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது.

இதில் கடைசி சூப்பர் 12 சுற்று போட்டியில் இந்திய அணி நேற்று மெல்போர்ன் ஸ்டேடியத்தில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணி 17.2 ஓவரில் 115 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியில் ரோஹித் ஷர்மா பீல்டிங் செய்யும் போது, அவரை சந்திக்க நேற்று மைதானத்திற்குள் ஒரு ரசிகர் திடீரென ஓடி வந்தார். அந்த சிறுவன் ரோஹித் சர்மாவின் அருகில் வந்து போது பின் துரத்திக்கொண்டு வந்த  பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்தனர்.

அப்போது ரோஹித் அருகே வரவும் கண்ணீர் விட்டு அந்த சிறுவன் அழுதான். பின் ரோஹித் அந்த சிறுவனை அங்கிருந்து பேசி கையசைத்து அனுப்பி வைத்தார். பாதுகாப்பு அதிகாரிகள் அங்கிருந்து பிடித்து இழுத்து சென்றனர். அதன்பின் மைதானத்தில் அத்துமீறி  நுழைந்ததற்காக ரசிகருக்கு 6.5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.. பார்வையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கத்தை மீறியதற்காக ரசிகருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டது.  ரோஹித் சர்மா போட்டி முடிந்த பின் ரசிகர்களை சந்தித்து செல்பி எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |