Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரூ.70 லட்சம் மோசடி…. நெருக்கடி கொடுக்கும் வங்கிகள்…. பெண்களின் பரபரப்பு புகார்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் கீழபுத்தேரி பகுதியில் வசிக்கும் வழக்கறிஞர் சிவாஜி தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, வடசேரி கீழ புத்தேரி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் நடத்தி வந்த சுய உதவி குழுவில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் இணைந்து வங்கிகளில் கடன் பெற்றுள்ளனர்.

அந்த குழு தலைவி பெண்களின் கையெழுத்தை பயன்படுத்தி, ஆவணங்களை காண்பித்து 70 லட்ச ரூபாய் வரை பல்வேறு வங்கிகளில் இருந்து கடனாக வாங்கியுள்ளார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட வங்கியில் இருந்து கடனை அடைக்கும்படி நோட்டீஸ் வந்ததால் சுய உதவி குழு தலைவியிடம் இது குறித்து முறையிட்டனர். ஆனால் அவர் எந்த பதிலும் அளிக்காமல் 70 லட்ச ரூபாய் பணத்துடன் தப்பி சென்றுவிட்டார். எனவே மோசடி செய்த சுய உதவி குழு தலைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |