இந்தியாவில் அத்தியாவசிய தேவைகளுள் ஒன்றாக சமையல் எரிவாயு சிலிண்டர் இருக்கிறது. இதனுடைய விலை ஒவ்வொரு மாதமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. கொரோனா காலக் கட்டத்தில் சிலிண்டரின் விலையானது ஒவ்வொரு மாதமும் புதிய உச்சத்தை தொட்டது. தற்போது இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்து வருவதால் டீசல், பெட்ரோல் உள்ளிட்ட கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்ததை அடுத்து சிலிண்டர் விலையும் உயர்ந்து வருகிறது. இதனால் சாமானிய மக்களால் எரிவாயு சிலிண்டரை வாங்க முடியாத சூழல் நிலவி வருகிறது.
இதனை தடுப்பதற்கு எல்பிஜி நிறுவனங்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் எல்பிஜி நிறுவனங்கள் இணைந்து கலப்பு எரிவாயு சிலிண்டர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த சிலிண்டரின் எடையானது சாதாரணசிலிண்டரை விடவும் குறைவு ஆகும். அதன்படி இதில் நிரப்பப்படும் வாயுவின் அளவு குறைவாக இருக்கும். அதாவது இரும்பு உருளையை விடவும் இது 7 கிலோ எடை குறைவாக இருக்கிறது. இவற்றில் 3 அடுக்குகள் இருப்பதால், இது சாதாரண மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் உள்நாட்டு சிலிண்டர் 17 கிலோ, ஆனால் இந்த கலப்பு சிலிண்டரின் எடை 20 கிலோவாக இருக்கிறது.
இப்போது இந்த கலப்புஎரிவாயு சிலிண்டரின் விலையை குறித்து விரிவாக தெரிந்து கொள்வோம். இந்தியன் ஆயிலின் அறிவிப்பு அடிப்படையில் 10 கிலோ எரிவாயு கொண்ட கலப்புஎரிவாயு சிலிண்டரின் விலையானது மும்பையில் ரூபாய் 634க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று கொல்கத்தாவில் ரூபாய் 652க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி சென்னையில் கலப்பு எரிவாயு சிலிண்டர் ரூபாய் 645க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது அனைத்து மக்களுக்கும் பயன்படும் அடிப்படையில் விரைவில் வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.