Categories
பல்சுவை

ரூ.700-க்கும் குறைவாக…. 50 எம்பி கேமரா ஸ்மார்ட்போன்…. பிளிப்கார்டில் அதிரடி சலுகை….!!!!

தற்போது நீங்கள் ஒரு புது ஸ்மார்ட் போனை வாங்க எண்ணி இருந்தால் 700 ரூபாய்க்கும் குறைவான விலையில் தரமான ஸ்மார்ட்போனை வாங்குவது பற்றி யோசிப்பது நல்லது. ஸ்மார்ட் போன் நிறுவனமான POCO, POCO M5 என்ற புது ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது குறைந்த விலையில் பல்வேறு அற்புதமான அம்சங்களுடன் வெளிவந்து உள்ளது.  செப்டம்பர் 13 2022 முதல் இந்த ஸ்மார்ட் போன் விற்பனைக்குக் கிடைக்கிறது. அறிமுகத்தையொட்டி பல்வேறு சலுகைகள் கிடைப்பதால், அந்த அனைத்து சலுகைகளும் உங்களுக்கு பொருந்தும் பட்சத்தில் அந்த ஸ்மார்ட்போனை நீங்கள் வெறும் 700 ரூபாய்க்கும் குறைவான விலைக்கு வீட்டிற்கு எடுத்துச்செல்லலாம்.

POCO M5 2 சேமிப்பக வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. 4GB ரேம் மற்றும் 64GB சேமிப்பகத்துடன்கூடிய வேரியண்டுகள் சந்தையில் களமிறக்கப்பட்டு உள்ளது. இதன் விலையானது ரூபாய்.12,499 ஆகும். இந்த போனை 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ரேம் கொண்டு எடுக்கலாம். ஆக்சிஸ் வங்கி (அல்லது) ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் (அல்லது) டெபிட் கார்டு வாயிலாக இந்த போனுக்கு பணம் செலுத்தினால், உடனே ரூபாய்.1,500 தள்ளுபடி கிடைக்கும். இந்த வழியில் இப்போனின் விலையானது உங்களுக்கு ரூ.10,999 ஆக குறைந்துவிடும். அத்துடன் POCO M5 ஸ்மார்ட் போனுக்கு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படுகிறது.

பழைய போனுக்கு பதில் இந்த ஸ்மார்ட் போனை வாங்கினால் ரூபாய்.11,850 வரை சேமிக்கலாம். இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப்பலனையும் நீங்கள் பெற்றால், இந்த போனின் விலையானது உங்களுக்கு ரூ.649 ஆக இருக்கும். இதன் வாயிலாக சுமார் 13 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள போனை 700 ரூபாய்க்கும் குறைவான விலையில் வீட்டிற்கு எடுத்துச் செல்லமுடியும். POCO M5 செயலியைப் பொறுத்தவரையிலும் Mediatek Helio G99-ல் இயங்குகிறது. இதன் கேமரா அமைப்பில் 50 எம்பி மெயின் சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 2 எம்பி மேக்ரோ சென்சார் உடைய கேமரா இருக்கும். 8 MP செல்பி கேமராவும் போகோ எம்5ல் வருகிறது. 6 ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி வரை சேமிப்பகத்துடன், இந்த போன் 6.58 இன்ச் முழு HD + டிஸ்ப்ளே, விரைவான சார்ஜிங் ஆதரவு, டூயல் சிம் வசதி மற்றும் ஆடியோ ஜாக்உடன் 5000mAh பேட்டரியையும் கொண்டிருக்கிறது. இது 4G ஸ்மார்ட்போன் ஆகும்.

Categories

Tech |