Categories
தேசிய செய்திகள்

ரூ 7,00,000 செலவு செய்தேன்… ஆனாலும் முடியல… மனைவி, குழந்தையை பிரிந்து தவிக்கும் கணவர்..!!

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மனைவியை இந்தியாவிற்கு வரவழைக்க லட்சக்கணக்கில் விமான டிக்கெட்டுக்கு செலவு செய்ததாக கணவன் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்

ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் பிரதீப்குமார் ரோஸின் தம்பதியினர். இத்தம்பதியினருக்கு சிம்ரன் என்ற மகள் உள்ளார். ரோஸின் பிலிப்பைன்ஸ் நாட்டை பூர்விகமாக கொண்டவர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் ரோஸின் சிம்ரனை அழைத்துக்கொண்டு பிலிப்பைன்ஸ் சென்றார். அச்சமயம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மீண்டும் இந்தியாவிற்கு திரும்ப முடியாமல் சிக்கியுள்ளார். இதுகுறித்து ரோஸின் கணவர் பிரதீப் கூறுகையில், “என் மனைவியின் விசா நவம்பர் 2020 வரை உள்ளது. ஆனால் இந்தியாவிற்கு அவரால் திரும்பி வர முடியவில்லை. நான் விமான டிக்கெட் பதிவு செய்தும் அது ரத்து ஆகிவிட்டது.

அதோடு அதற்கு செலுத்திய பணமும் திருப்பித் தரப்படவில்லை. இதற்காகவே நான் ஏழு லட்சம் ரூபாய் வரை இதுவரை செலவு செய்து விட்டேன். வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழும் எனது மனைவி மற்றும் குழந்தையால் இந்தியாவிற்கு வர இயலவில்லை காரணம் ரோஸின் பிலிப்பைன்ஸ் குடியுரிமை பெற்றவர். எனது மகள் சிம்ரன் இந்திய குடிமகளே. ஆனால் அவள் மட்டும் தனியாக வர இயலாது. இந்த விஷயத்தில் யாரும் எனக்கு உதவவில்லை. தொழில்நுட்ப சிக்கலால் அவர்கள் இந்தியாவுக்கு வருவதில் தடங்கல் இருப்பதாக கூறுகின்றனர். இதில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் கூறியுள்ளார்

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |