செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியதில் 23 கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான 60 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். சென்னை, கோவை, காஞ்சிபுரம், அரியலூர் மட்டுமின்றி மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் தொடர்ச்சியாக வருமானவரித்துறை அதிகாரிகள் ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார்கள். அதாவது 23 கோடி ரூபாய் பறிமுதல் பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், வெளிநாட்டு சொத்துக்கள் 110 கோடி ரூபாய் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
மேலும் கருப்பு பண சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்கள். இது மட்டுமில்லாமல் கணக்கில் வராத பணம் பதுக்கி வைத்த லாக்கர்களும் கண்டுபிடித்து இருப்பதாகவும் வருமானவரித் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மேலும் மருத்துவ சீட்டு வழங்கியதில் மோசடி நிகழ்ந்திருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்ற பணம், ஆவணங்கள் அனைத்தையும் ஆய்வு செய்யக் கூடிய பணியில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான இருக்கக்கூடிய நிர்வாகிகள் மற்றும் அதனுடைய இயக்குனர்கள் நேரில் வரவழைத்து விசாரணை நடத்தவும் வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்திருக்கிறார்கள் . முதற்கட்டமாக கைப்பற்றக்கூடிய ஆவணங்கள் அனைத்தையும் ஆய்வு செய்ததில் ரூ. 700 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.