நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் வசிப்பவர் குணசீலன். இவர் அதிமுக முன்னாள் சத்துணவுத் திட்ட துறை அமைச்சர் சரோஜாவின் உதவியாளர் ஆவார். இவர் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக சரோஜாவிடம் உதவியாளராக இருந்துள்ளார். இந்நிலையில் இவர் முன்னாள் அமைச்சர் சரோஜா சமூகநிலை துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 75 லட்சம் பணம் மோசடி செய்துவிட்டதாக ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து குணசேகரன் கூறுகையில், கடந்த 20 வருடங்களாக சரோஜாவிடம் உதவியாளராக இருந்து வந்துள்ளேன். கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த சரோஜா வீடு கட்டுவதற்கு பணம் தேவைப்படும் என்பதனால் சத்துணவு திட்டத்தில் வேலை வாங்கி கொடுத்துவிடலாம் என்று கூறி பணம் வசூல் செய்யும்படி கூறினார். தற்போது ஆட்சி மாறியதால் பணம் கொடுத்தவர்கள் கேட்டு பணத்தை நெருக்கடி கொடுக்கிறார். ஆனால் சரோஜாவிடம் பணத்தை கேட்டதற்கு பணம் கொடுத்ததற்கு எந்தவித ஆதாரமும் கிடையாது என்று கூறி என்னுடைய குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். இதனால் உயிர் பயத்தில் புகார் அளித்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.