Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரூ 75,00,000 மோசடி.… “நிதி நிறுவன மேலாளர்கள் கைது”… போலீஸ் அதிரடி…!!

ரூ 75 லட்சத்தை மோசடி செய்த நிதி நிறுவன மேலாளர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னையில் உள்ள ராயப்பேட்டையில் பி.என்.பி ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் என்ற நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. சென்னை பெரம்பூரை சேர்ந்த மாயா அரவிந்த் தக்சன் என்பவர் இந்த நிறுவனத்தில் நிரந்தர வைப்பு கணக்கு வைத்துள்ளார். இவர் இரண்டு கணக்குகளில் வெளிநாட்டில் இருக்கும் போது ரூ 75 லட்சம் வரை டெபாசிட் செய்து உள்ளார். ஆனால் அந்த 75 லட்சம் பணம் அவரது கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி நிறுவனத்தில் மேலாளராக பணி புரியும் ராஜசுந்தர்(37), ஹக்கீம்(36) ஆகியோர் மாயா அரவிந்த் தக்சன் பெயரில் பொய்யான கடிதமொன்றை தயார் செய்து கொடுத்து ரூ 75 லட்சம் பணத்தை மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் மாயா அரவிந்த் தக்சன் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து ராஜ சுந்தர், ஹக்கீம் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |