ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு போட்டியாக பல்வேறு சிறப்பான திட்டங்களை BSNL அறிமுகம் செய்துள்ளது. அதன்படி BSNL நிறுவனம் வழங்கும் ரூபாய். 769 திட்டத்தைப் பற்றி நாம் தெரிந்துகொள்வோம். BSNL தமிழக வட்டார வாடிக்கையாளர்களுக்கு இந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலையானது ரூ.769ஆக இருக்கும். அத்துடன் இத்திட்டத்தை ரீசார்ஜ் செய்வதன் வாயிலாக நீங்கள் மொத்த வேலிடிட்டி 84 நாட்களுக்கு பெறுவீர்கள்.
மேலும் தினமும் 100sms, ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட், லிஸ்ட்ன் பாட்காஸ்ட் சர்வீசஸ், ஹார்டி மொபைல் கேம் சேவை, லோக்துன் மற்றும் ஜிங் ஆகிய பல்வேறு சலுகைகளை பெறுவீர்கள். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2gp டேட்டா நன்மை வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி வரம்பற்ற அழைப்பு நன்மையும் இந்த ரீசார்ஜ் திட்டத்தில் பெறுவீர்கள்.