Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ரூ.79 ஆயிரத்திற்கு ஆர்டர் செய்த பொருள்…. வந்ததோ 100 ரூபாய் பொம்மை கார்…. பணமெல்லாம் போச்சே…!!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக தங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்டர் செய்து வருகின்றனர். இதில் மக்களுக்கு ஒரு சில பொருட்கள் அவர்கள் ஆர்டர் செய்த பொருள் சரியாக வந்து விடுகிறது. ஆனால் ஒரு சில பொருட்கள் தவறாக வந்து விடுவதால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் சிவதாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் மொய்தீன்.

இவர் தனது நன்பருக்காக 79 ஆயிரம் மதிப்புள்ள டிரோன் கேமரா ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அதோடு கிரெடிட் கார்டு மூலம் முழு பணத்தையும் செலுத்தி உள்ளார். அதன் பிறகு இன்று பார்சல் வந்துள்ளது. அப்போது அந்த பார்சலில் டிரோன் கேமிராவுக்கு பதிலாக 100 ரூபாய் மதிப்புள்ள பொம்மை கார் இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சடைந்த இருவரும் flipkart நிறுவனத்திடம் புகார் அளித்தனர். இது குறித்து விசாரணை நடத்துவதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |