Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ரூ.80 லட்சம் கேட்டு சிப்ஸ் கடைக்காரர் கடத்தல்…. 6 பேர் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் கூத்துப்பாடி மடம் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் மும்பையில் சிப்ஸ் கடை நடத்தி வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா பரவல் காரணமாக ஊருக்கு வந்த விஸ்வநாதன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் விஸ்வநாதன் தனது மனைவி மஞ்சுளாவிடம் பென்னாகரம் செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார் ஆனால் அவர் வீட்டிற்கு திரும்பி வராததால் அதிர்ச்சியடைந்த மஞ்சுளா தனது கணவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். அப்போது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனையடுத்து விஸ்வநாதனின் செல்போன் எண்ணில் இருந்து அவரது தம்பி பூபதியை அழைத்து பேசிய மர்ம நபர்கள் 80 லட்ச ரூபாய் கொடுத்தால் கடத்தி வைத்திருக்கும் விஸ்வநாதனை விடுவிப்போம் என கூறியுள்ளனர்.

மேலும் பணத்தை கொடுக்காவிட்டால் அவரை கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதுகுறித்து மஞ்சுளா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நேற்று முன்தினம் ஓமலூர் பகுதியில் வைத்து விசுவநாதனை பத்திரமாக மீட்டனர். இதனையடுத்து அவரை கடத்தியதற்காக காந்தி, தமிழரசன், ரத்தினம், கார்த்திகேயன், பாஸ்கரன் ஆகிய ஐந்து பேரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது பென்னாகரம் பகுதியை சேர்ந்த முருகன் என்பவருக்கும் விஸ்வநாதனுக்கும் கொடுக்கல் வாங்கல் இருந்ததாகவும், பணத்திற்கு ஆசைப்பட்டு முருகன் தனது கூட்டாளிகளுடன் இணைந்து விஸ்வநாதனை கடத்தியதும் தெரியவந்தது. இதனால் முருகன் உள்பட 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் மூன்று பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |