Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூ 800 சொல்லுறாங்க …! கேட்டா ”பல்லை இளிக்கிறீங்க”…. தலைய தொங்க போடுறீங்க….!!

தமிழக பட்ஜெட் குறித்த கேள்விக்கு நாம் தமிழர் கட்சி சீமான் செய்தியாளர்களுக்கு பதிலளித்துள்ளார். அதில், வருவாயை பெருக்குவதற்கு உட்கார்ந்து சிந்திக்கலாம். நான் சொல்வது போல நிலமும், வளமும் சார்ந்த தொழிற்சாலைகளை தொடரலாம். நான் சொல்லும் போது கிண்டல் அடிக்கிறீங்க, சிரிக்கிறீங்க… தமிழ்நாட்டுக்கு பால் எங்க இருந்து வருது ன்னு கேட்டா பல்லை இளிக்கிறீங்க… கறி எங்கிருந்து வருதுன்னு கேட்டா தலைய தொங்க போடுறீங்க…

ஒரு கிலோ கறி 800 ரூபாய் நான் வாங்குகிறேன்  ஆட்டுக்கறி… 100 க்கு 95 பேர் கறி திங்கறான். ஆனா தமிழ்நாட்டுக்கு ஆந்திரால இருந்து கறி வருது. திங்கும் போது உனக்கு இனிக்குது, ஆனா வளர்க்கும்போது கசக்குதா ? தமிழ்நாட்டுக்கு பால் ஆந்திராவில் இருந்து வருது. ஒரே நாள்ல லிட்டருக்கு ஐந்து ரூபாய் விலை ஏற்றும்போது இங்கே இருக்கிற பால் முகவர்கள் போராடுகிறார்கள் விலையை குறைக்க சொல்லி…

மக்கள் கிட்ட நான் போராட்டம் நடத்தும்போது வேண்டாம்…. நீங்கள் தேவையில்லாமல் போராடுகிறீங்க…. நாங்க யாரும் பால் வாங்குவது இல்லை என  வாங்கும் திறன் அற்றவர்களாக மக்கள் ஆயிட்டாங்க.. மாற்றுப் பொருளாதாரம் இருக்கு. பாலின் சந்தை மதிப்பு எவ்வளவு ?  முதலில் சொல்லுங்க..  அதையெல்லாம் விட்டுவிட்டு ஆடு, மாடு வளர்ப்பது… வேளாண்மை செய்வது… நாட்டுக்கோழி வளர்ப்பது…. பட்டுப்பூச்சி வளர்ப்பது… மீன் வளர்ப்பது… சிற்றூர்களில் பொருளாதாரத்தை வளர்க்கும் போது பொருளாதாரம் தானாக வளரும். அதை விட்டுட்டு நகர்ப்புற வளர்ச்சி மட்டுமே கவனத்தில் எடுத்துக்கொண்டு செல்வது  சரியாக வளராது. அது சரியான வளர்ச்சி அல்ல.

நான் உடற்பயிற்சி கூடத்தில் எல்லா பாகங்களுக்கும் பயிற்சி கொடுத்தால் தான் உடலுக்கு வலு. அதை விட்டுட்டு தோள்பட்டை மற்றும் ஏறிக்கொண்டே போனால் அது கட்டி, வீக்கம். அப்படித்தான் இந்திய நாட்டின் பொருளாதாரம் இருக்கு, அதை பின்பற்றவே கூடாது. இது சுமார் சிட்டி ஸ்மார்ட் சொல்லுமே தவிர, ஸ்மார்ட் வில்லேஜ் பத்தி கவலை படாது. அதனால கிராமங்கள் காலியாகி நகரங்கள் பிதுங்கி வழியுது. இந்த நிலை இருந்தால் ரொம்ப கஷ்டம்.  ரொம்ப பெரிய சிக்கலுக்கு ஆளாகி விடுவோம் என சீமான் தெரிவித்தார்.

Categories

Tech |