Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ரூ.8000வாங்கிட்டு போனீங்க….! ஆய்வுக்கு வந்த அதிகாரியை….. அதிர வைத்த பெண் பரபரப்பு குற்றசாட்டு …!!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேருந்து நிலையம் அருகே உணவுப்பொருள் பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள மளிகை கடையில் தரமற்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து உணவு பொருள் பாதுகாப்புத் துறை ஆய்வாளர் கைலாஷ் குமார் மற்றும் அதிகாரிகள் அங்குள்ள மளிகை கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் ரசாயணம் பூசப்பட்ட ஷாம்பு மற்றும் தரமற்ற டீ- தூளை பயன்படுத்தினால் மக்களுக்கு புற்றுநோய் உண்டாகும் எனக் கூறி அந்த பொருட்களை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். ஆய்வில் வரும் முடிவை வைத்து அந்த கடையின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,

இதே போல் செங்கம் பகுதியில் உள்ள உணவகங்கள்,  மளிகைக் கடைகள் என அனைத்து இடங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர் கைலாஷ் குமார் தெரிவித்தார். மேலும் , கடையில் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது மளிகை கடை உரிமையாளரான பெண் ஒருவர் உணவு ஆய்வாளர் தன்னிடம் சென்ற மாதம் கூட எட்டாயிரம் ரூபாய் கையூட்டு வாங்கி செய்ததாக குற்றம் சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |