கொடுத்த பணத்தை திருப்பித் தர மறுத்த மளிகை கடைக்காரரை கண்டித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்தவர் வேணி. இப்பெண் மணி என்பவரிடம் தன் பணத்தை கொடுத்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை 9 லட்சம் ரூபாய் வரை கொடுத்ததாக தெரிகிறது. தற்போது பணத்தை திருப்பி கேட்ட போது மளிகை கடைகாரர் தர மறுத்ததாக வேணி குற்றம் சாட்டினார்.
இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் மூலம் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில் வேணி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டீசலை தனது உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனடியாக அங்கிருந்த காவல்துறையினர் அவரை தடுத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பானது.