மாநகராட்சி பள்ளிகளுக்கு நவீன மேஜைகள் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக முதலமைச்சர் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு திட்டமிட்டு அதற்கான வேலைகளையும் செய்து வருகிறார். இதனையடுத்து தமிழக முதல்வர் டெல்லிக்கு பயணம் சென்றிருந்த போது டெல்லியில் உள்ள பள்ளிகளை பார்வையிட்டார். அதன்பின் டெல்லியில் இருப்பது போன்று தமிழக பள்ளிகளையும் மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இதன் முதல் கட்ட துவக்கமாக மாநகராட்சி பள்ளிகளுக்கு நவீன மேஜைகள் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக 9 3/4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் 108 பள்ளிகளுக்கு 10,279 மேஜைகள் வாங்கப்பட இருக்கிறது. இதில் 1291 மேஜைகள் ஏற்கனவே பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு விட்டது. இந்த மேஜைகள் ஒவ்வொரு வகுப்புகளுக்கும் ஏற்றார் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி 1 முதல் 3-ம் வகுப்பு வரை மஞ்சள் நிறத்திலும், 4 மற்றும் 5-ம் வகுப்புகளுக்கு ஆரஞ்சு நிறத்திலும், 6 முதல் 8-ம் வகுப்பு வரை இளஞ்சிவப்பு நிறத்திலும், 9 முதல் 12-ம் வகுப்பு வரை நீல நிறத்திலும் மேஜைகள் செய்யப்படும்.