Categories
தேசிய செய்திகள்

ரூ.900த்தோடு… ”2006ல் தொலைந்த பர்ஸ்”… 14 ஆண்டுக்கு பின் கிடைத்த அதிசயம் …!!

மும்பையில் 2006ம் ஆண்டு காணாமல் போன பர்ஸ் ஒன்று, 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கிடைத்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹேமந்த் படல்கர் என்பவர் கடந்த 2006ம் ஆண்டு ரயிலில் பயணம் செய்த போது தனது பர்ஸை தொலைத்துவிட்டார். அதில் ரூ.900 பணம் இருந்துள்ளது. ஒரு 500 ரூபாய் நோட்டும், 100 ரூபாய் நோட்டுகள் நான்கும் இருந்துள்ளது. இதனையடுத்து அவர் ரயில்வே போலீசில் புகார் அளித்தார். ஆனால் எங்கு தேடியும் பர்ஸ் கிடைக்காததால் ஹேமந்த் ஏமாற்றமடைந்தார். இந்நிலையில் அவர் ஆச்சரியப்படும் வகையில், ஒரு சம்பவம் நடந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம், ரயில்வே போலீஸ் அதிகாரி ஒருவரிடம் இருந்து அவருக்கு அழைப்பு வந்துள்ளது. 14 வருடங்களுக்கு முன்பு அவர் தொலைத்த பர்ஸ் தற்போது கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.

14 ஆண்டுகளுக்கு முன்னர் திருட்டு போன ...

இந்த தகவல் ஹேமந்துக்கு வியப்பையும், மகிழ்ச்சியையும் ஒருசேர ஏற்படுத்தியது. இருப்பினும் ஊரடங்கால் அவரால் அதனை வாங்க செல்ல முடியவில்லை. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட பிறகு, ரயில்நிலையம் சென்று தனது பர்ஸை வாங்கியுள்ளார். பணமதிப்பிழப்பால் பழைய 500 ரூபாயை பயன்படுத்த முடியாது என்றும், அதனை மாற்றி தருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். ஸ்டாம்ப் பேப்பர் வேலைக்காக ரூ.100 எடுத்துக் கொண்டு மீதமுள்ள ரூ.300ஐ ஹேமந்த் படல்கரிடம் கொடுத்துள்ளனர்.

பர்ஸை திருடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பணத்துடன் தொலைந்த பர்ஸ், 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் கிடைத்துள்ளது படல்கரை மட்டுமல்லாமல், அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |