Categories
மாநில செய்திகள்

ரூ.97,000…. வேலைத்தருவதாக கூறி ஆன்லைனில் நூதன முறையில் மோசடி… மக்களே உஷார்….!!!

சென்னையில் மோசடி கும்பல் ஒன்று பகுதி நேர வேலை வாங்கி தருவதாக கூறிய ஆன்லைனில் நூதன முறையில் 97 ஆயிரம் திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வடபழனியில் சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு எஸ்எம்எஸ் மூலம் ஆன்லைன் லிங்கை அனுப்பி எட்டு கேள்விகளுக்கு பதில் சொன்னால் பணம் கிடைக்கும் என்று மோசடி கும்பல் கூறியுள்ளது. இதனையும் நம்பி அந்த லிங்கை அவர் கிளிக் செய்துள்ளார்.

இதையடுத்து அவரின் வங்கி கணக்கு முடக்கப்பட்டு அவரின் கணக்கில் இருந்து 97 ஆயிரம் திருடப்பட்டுள்ளது. பிறகு இந்த சம்பவம் தொடர்பாக அருகே உள்ள காவல் நிலையத்தில் சீனிவாசன் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இதுபோன்று தெரியாத நபர்கள் யாரேனும் லிங்க் அனுப்பி கிளிக் செய்ய சொன்னால் அது குறித்து தங்களிடம் புகார் அளிக்கும்படி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |