இந்த வருடம் ஐபிஎல் ஸ்பான்சராக மீண்டும் பழைய ஸ்பான்சர் விவோ இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் போட்டிகளுக்கு டைட்டில் ஸ்பான்சராக கடந்த 2016 முதல் விவோ இருந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு dream11 டைட்டில் ஸ்பான்சராக இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு மீண்டும் ஐபிஎல் ஸ்பான்சராக விவோ இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ட்ரீம் 11 ஸ்பான்சராக இருக்க 222 கோடி கொடுத்தது. ஆனால் விவோ நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் பிசிசிஐ சுமார் 400 கோடி கொடுக்கும் என்பதால், மீண்டும் விவோ ஸ்பான்சராக இருக்கும் என கூறப்படுகிறது. ஏற்கனவே டைட்டில் ஸ்பான்சர் காரணமாக நஷ்டம் ஏற்பட்டதாக பிசிசிஐ தரப்பில் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.