விஜய் சேதுபதி பாலிவுட் முன்னணி ஹீரோக்களையே மிஞ்சிய சம்பளம் வாங்கியுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய் சேதுபதியின் கால்ஷீட் கிடைப்பது கஷ்டம். வருடம் முழுவதும் பிஸியாக இருக்கும் அவர் தன்னுடைய இமேஜ் பற்றி எல்லாம் கவலைப்படாமல் எல்லா கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இதன் காரணத்தினால் அவரை மலையாளம், தெலுங்கு, இந்தி என எல்லா பக்க்கமும் தானாக வந்து படங்கள் ஒப்பந்தம் செய்கின்றனர். இந்நிலையில் இந்தி வெப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் விஜய் சேதுபதி. பாலிவுட் நடிகர் ஷாகித் கபூருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார்.
ஷாகித் கபூருக்கு 40 கோடியும், விஜய் சேதுபதிக்கு 55 கோடியும் சம்பளமாக பேசப்பட்டுள்ளது. பாலிவுட்டின் முன்னணி ஹீரோவாக இருக்கும் ஷாஹித் கபூரை விட விஜய் சேதுபதி அதிகமாக சம்பளம் அது குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது இந்தி ரசிகர்களையே வியக்க வைத்துள்ளது. இதையடுத்து சன்னி தொடரின் அடுத்த சீசன் வருமேயானால் தன் சம்பளத்தை உயர்த்த போவதாக ஷாஹித் கபூர் அறிவித்துள்ளார். ஆனால் விஜய் சேதுபதி இதுபோன்ற எந்த கண்டிஷனும் போடவில்லை என்று கூறப்படுகிறது. ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருக்கிறார்.