நடிகர் விஜய் வாங்கிய 8 கோடி காருக்கு 10 கோடி வரி விதிக்கப்பட்டது இதற்காகத்தான் அவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இது பற்றி நாம் தெளிவாக இதில் பார்ப்போம்.
நடிகர் விஜய் சமீபத்தில் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரிவிலக்கு கேட்டு கோர்ட்டில் மனு அளித்திருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி இந்த வழக்கை தள்ளுபடி செய்தது மட்டுமல்லாமல், ஒரு லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில் பலருக்கு என்ன வரி, எதற்காக இந்த வரி என்ற சந்தேகங்கள் இருக்கிறது. இது பற்றிய தெளிவான விளக்கத்தை இதில் பார்ப்போம்.
இந்தியாவை சேர்ந்த ஒருவர் இந்தியாவில் சம்பாதித்து வைத்திருக்கும் பணத்தை இந்தியாவில் செலவு செய்யாமல், வெளிநாட்டில் உள்ள ஒரு பொருளை வாங்குவதற்கு செலவு செய்தால் அது இந்தியாவிற்கு வரி நஷ்டத்தை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட வரி நஷ்டத்தை ஈடு செய்வதற்காக, இந்திய அரசு வெளிநாடுகளில் இருந்து பொருட்களை வாங்கி அதை இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கு சில வரிகளை விதிக்கும். பொருளுக்கு ஏற்ப இந்த வரிவிதிப்பு மாறுபடும்.
உதாரணமாக இந்தியாவில் கிடைக்காத பொருளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்தால் குறைந்த வரி விதிக்கப்படுகிறது.
இந்தியாவில் கிடைக்கும் பொருளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்தால் அதிக வரி வசூலிக்கப்படும். அதேபோன்றுதான் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கார் ஒன்றை இங்கிலாந்திலிருந்து வாங்கி இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு தனக்கு வரிவிலக்கு வேண்டும் என்று கேட்டிருந்தார். இதற்கு கோர்ட் மறுப்பு தெரிவித்தது. மேலும் அவர் வாங்கிய கார் முழுவதும் வெளிநாட்டில் கட்டமைக்கப்பட்டது. அந்த வகை கார்களுக்கு இந்தியாவில் மிக அதிகமான வரி விதிக்கப்படும். விஜய் வாங்கிய காரின் விலை சுமார் 7 கோடி, இதற்கான இன்சூரன்ஸ் மற்றும் போக்குவரத்து என மொத்தம் 8 கோடி செலவு வைத்தால் அதற்கான வரி மட்டும் 10 கோடி கட்டவேண்டும்.
அதாவது 8 கோடி கொடுத்து வாங்கிய காருக்கு, 10 கோடி வரி செலுத்த வேண்டும். அப்படி செலுத்தினால் மட்டுமே இந்தியாவுக்குள் அந்த காரை கொண்டுவரமுடியும். ஆக மொத்தம் ஆன செலவு 18 கோடி. இந்த இறக்குமதி வரியை நடிகர் விஜய் கட்டி விட்டார். ஆனால் காரை தமிழகத்திற்கு கொண்டு வர நுழைவு வரி கட்ட வேண்டும். அவர் கார் வாங்கிய போது அந்த வரி நடைமுறையில் இல்லை. அதற்கு பிறகுதான் ஜிஎஸ்டி என்ற வரி கொண்டுவரப்பட்டது. தற்போது இந்த வரியானது ஜிஎஸ்டிக்குள் சென்று விட்டது. வெளிமாநிலத்தில் இருந்து ஒரு பொருளை வாங்கி தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தால், அது அத்தியாவசிய பொருளாக இல்லாதபட்சத்தில் மாநிலங்களுக்கு வரி கட்ட வேண்டும்.
இதை எதிர்த்து தான் விஜய் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை சுப்பிரமணியம் தலைமையிலான கோர்ட் மறுத்து விட்டது. மேலும் விஜய் வாங்கிய காருக்கு மொத்தம் 120 சதவீதம் வரி கட்ட வேண்டும். இதற்கு எதிராக அவர் வழக்கு தொடர்ந்த போது, அப்போது விசாரணை நடத்திய நீதிபதி, விஜய் 20 சதவீதம் வரியை கட்டி காரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தார். இதற்கான தீர்ப்பு வந்த பிறகு, அடுத்த கட்டநடவிடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கான தீர்ப்பில் தற்போது தான் வந்துள்ளது. அதன்படி 20 சதவீத வரியை கட்டி காரை பயன்படுத்திய விஜய், தற்போது மீதமுள்ள 105 சதவீத வரியை கட்ட வேண்டும்.