Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ரெடிமேடு ஆடை தொழில் தொடங்கணுமா?…. வெளியான மிக முக்கிய தகவல்….!!!!

ரெடிமேடு ஆடை தொழில் துவங்க நிதிஉதவி வழங்கப்படும் என்று தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், மாறி வரும் சூழலுக்கு ஏற்பவும் இந்த மக்களில் 10 பேரைக் கொண்டு குழுவாக அமைத்து ஆயத்த ஆடையக உற்பத்திக்கு ரூபாய்.3 லட்சம் நிதியளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

ஆகவே பயனாளிகளை தேர்வு செய்வதற்கான தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. அதன்படி, குறைந்தபட்சம் வயது வரம்பு 20 ஆகும். சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் வாயிலாக பயிற்சிபெற்ற நபர்களைக் கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும். இதையடுத்து விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவை பெண்கள் அமைந்துள்ள குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும். இவர்கள் 10 நபர்களை கொண்டு ஒரு குழுவாக இருக்க வேண்டும்.

இந்த 10 பேருக்கும் தையல்தொழில் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். அத்துடன் குழு உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூபாய்.1 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இத்திட்டத்தில் பங்குகொள்ள ஆர்வமாக இருக்கும் மற்றும் இந்த தொழிலில் முன் அனுபவம் உள்ள குழுவினர் தென்காசி கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்புகொண்டு விண்ணப்பிக்கலாம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது

Categories

Tech |