Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ரெடியாகுங்க… சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு பிறந்தநாள் ட்ரீட்… இசையமைப்பாளர் சொன்ன மாஸ் அப்டேட்…!!!

சர்காரு வாரி பாட்டா படத்தின் டீசர் குறித்து இசையமைப்பாளர் தமன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சர்காரு வாரி பாட்டா. கீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் இயக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ், 14 ரீல்ஸ் பிளஸ், மகேஷ் பாபு புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

மேலும் வருகிற ஆகஸ்டு-9ஆம் தேதி (நாளை) மகேஷ் பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு சர்காரு வாரி பாட்டா படத்தின் டீசர் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் இசையமைப்பாளர் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘இந்த படத்தின் டீசரை பார்த்தேன். அது என் மூளையை பரவசமாகிவிட்டது. தயாராகுங்க மக்களே’ என பதிவிட்டுள்ளார். இந்த டீசருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |